தலைவர் 170 அப்டேட் : ரஜினிக்கு வில்லனாகும் முரட்டு ஹீரோ..?

0
rajini-170
rajini-170

சினிமா உலகில் டாப் நடிகர்கள் பலரும் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அடுத்த பட இயக்குனரை தேர்வு செய்து விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் சூப்பர் ஸ்டார் தற்பொழுது தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்தபடத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி..

மற்றும் யோகி பாபு, விநாயகர், கன்னடா டாப் ஹீரோ சிவராஜ் குமார் போன்ற பலரும் நடித்து வருகின்றனர் இந்த படம் ஒரு ஜெயில் சம்பந்தப்பட்ட திரைப்படமாக உருவாகி வருகிறது ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு தற்போது படம் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக.. தனது 170வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இந்த தடவை இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உடன் அவர் கைகோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க வாய்ப்புகள் இருக்கிறதாம். மேலும் தலைவர் 170 ஆவது படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 120 கோடி சம்பளம் கொடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் அடுத்த படத்திற்கு தேவையான நடிகர் நடிகைகளை தற்போது சிபி சக்கரவர்த்தி தேர்வு செய்து வருவதாக சொல்லப்படுகிறது அந்த வகையில் ரஜினியின் அடுத்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கான நடிகரை தேர்வு செய்து வைத்திருக்கிறார்களாம். ரஜினிக்கு வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி தான் நடிக்க இருக்கிறாராம்.

இவர்கள் இருவரும் முப்பது வருடங்களுக்கு முன்பு தளபதி படத்தில் இணைந்தனர் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்த படத்தின் மூலம் இணைய இருப்பதாக கூறப்படுகிறது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதை மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.