ராக்கி பட நடிகர் இவ்வளவு பெரிய ஆளா..! அட இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி என்ற திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர்தான் வசந்த் ரவி இவ்வாறு பிரபலமான இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா அஞ்சலி போன்ற பல்வேறு நடிகைகள் இணைந்து நடித்து இருப்பார்கள்.

இவ்வாறு  இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக வசந்த் ரவி தரமணி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றது மட்டுமில்லாமல் பிலிம்பேர் விருதையும் விஜய் விருதையும் பெற்று கௌரவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் மாதேஸ்வரர் இயக்கத்தில் ராக்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு உருவான திரைப்படத்தை ஆர் ஏ ஸ்டூடியோ தயாரித்துள்ளது மட்டுமில்லாமல் இதனுடன் இணைந்து ரவுடி பிக்சர்  சார்பாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.

இவ்வாறு உருவாகும் இந்த ராக்கி திரைப்படமானது பழிவாங்கும் செயலை மிக வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் எடுத்துக் காட்டி இருப்பார்கள். மேலும் தரமணி திரைப்படத்திற்கு பிறகாக ஒரு நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தை தேடிவந்த வசந்த் ரவிக்கு இந்த திரைப்படம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்றே கூறலாம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கைவசம் 5 திரைப்படங்கள் வைத்திருப்பது மட்டுமில்லாமல் நமது நடிகர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மருத்துவ படிப்பை அமெரிக்காவில் படித்துவிட்டு அப்போலோவில் வேலை பார்த்தவர்.

மேலும் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக வீட்டுக்கு தெரியாமல் வேலைய பார்க்கும் பொழுது அடிக்கடி லீவு போட்டுவிட்டு நடிப்பதற்கு சென்றுவிடுவார் பின்னர் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பிறகுதான் வீட்டில் சொன்னாராம். இதனால் வித்தியாசமான கதைகளைத் தேடி  நடிப்பதன் காரணமாக பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment