ராக்கி பாயின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அந்த புகைப்படம்.!

yaash
yaash

கன்னட சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பெரிய அளவிற்கு ரீச் இல்லாமல் இருந்தார் நடிகர் யாஷ். இந்த நிலையில்தான் பிரசாந்த் நீல் கே ஜி எஃப் படத்தின் கதையை யாஷுக்கு சொல்ல அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே செம்ம மாஸாக அந்த படத்தில் நடித்து அசத்தினார்.

படம் வெளிவந்து எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலும் அடித்து நொறுக்கியது உடனடியாக அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது இந்த படமும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி தற்போது வெற்றி நடை கண்டு வருகிறது படம் வெளிவந்து குறைந்த நாட்களே ஆன நிலையில் தற்போது வசூலில் ஆயிரம் கோடியை தொட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நடிகர் யாஷ் சினிமா பயணம் வேற லெவலில் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் மற்றும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சினிமா உலகையும் தாண்டி பொது மக்களுக்கு நல்லது செய்யும் பல திட்டங்களையும் அவர் செய்துவருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் யாஷ் 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டிட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு இருவரும் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கையில் சேர்ந்து சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் யாஷ் ராதிகா பண்டிட் ஆகியோர்களின் திருமண புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

YAASH AND RADHIKA
YAASH AND RADHIKA
YAASH AND RADHIKA
YAASH AND RADHIKA