ROCKY பாய் KGF CHAPTER – 2 படத்தின் ரீலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.. உச்சக்கட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்.

கன்னட சினிமாவை புதியதொரு பரிமாணத்திறகு எடுத்துச் சென்றது கே ஜி எஃப் படம். இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார்.  படத்தின் கதைக்கு ஏற்றவாறு கட்டுமஸ்தான நடிகரான யாஷ் என்பவரை கமீட் செய்து நடிக்க வைத்தார்.

படம் வெளிவந்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது மட்டுமில்லாமல்  வசூலில் அள்ளிக் குவித்தது இதனால் இயக்குனரும், நடிகரும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டது.

மேலும் படத்தின் கதை முதல் பாகத்தில் முடிவில்லாமல் இருந்ததால் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க வேண்டும் என பல ரசிகர்கள் சொல்லிவந்ததை அடுத்து உடனடியாக இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உடனடியாக எடுத்துக் கொடுத்தார்.

இரண்டாம் பாகத்தின் படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தன அப்படிப் பார்க்கும் பொழுதே முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிக ஆக்சன் அதிகமாக இருக்கும் என தெரிந்தது.

சமீபத்தில் கூட யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளிவந்து மிரட்டியது

இதனையடுத்து ரசிகர்கள் இப்படத்தை பார்க்க மிக ஆர்வமாக இருந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை சொன்னால் நாங்கள் காத்திருப்போம் என கூறி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் யாஷ் KGF CHAPTER 2 படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிட்டுள்ளார். ரிலீஸ் ஜூலை 16ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment