சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக கலக்கி வருபவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் திடீரென உடல் எடை குறைந்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இவருக்கு என்னதான் ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் பல வதந்திகளுக்கு ரோபோ சங்கரின் பிரியங்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் மிமிக்ரி செய்து பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். இவ்வாறு தொடர்ந்து சின்னத்திரையில் பணியாற்றி வந்த இவருக்கு பிறகு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தனுஷ்வுடன் மாரி, அஜித்துடன் விசுவாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து அசத்தியிருந்தார்.
மேலும் இந்த படங்களைத் தொடர்ந்து தற்பொழுது இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ரோபோ சங்கர் போலவே இவருடைய மகள் இந்துஜாவும் சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் முதன் முறையாக விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து கார்த்தி- அதிதி சங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்திலும் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இந்துஜா மற்றும் ரோபோ ஷங்கர் அதேபோல் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அப்படி இந்துஜா சமீபத்தில் தனது தந்தையுடன் நடனமாடி ரீல் செய்யும் வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில் அந்த வீடியோக்களுக்கு லைக்குகளும், கமாண்டுகளும் குவிந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் ரோபோ சங்கர் மிகவும் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார் எனவே இவருக்கு சுகர் இருப்பதாகவும், உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவும் கூறி வந்த நிலையில் தற்போது அந்த வதந்திகளுக்கு ரோபோ சங்கரின் மனைவி முற்றுப்புள்ளி வைத்தார். அதாவது தொடர்ந்து படங்களில் நடித்து வருவதனால் பிட்னஸ் தேவைப்படுவதாகவும் ஆரோக்கியமான உணவுகளுடன் பிட்னஸை மேற்கொண்டு வருவதனால் தான் உடல் எடை குறைந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.