பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபல நடிகையை பார்த்து ரசித்து பேசிய ரோபோ ஷங்கர்.? எப்படி எல்லாம் சொல்லிருக்காரு பாருங்கள்.

0

தெனிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி. தமிழில் தருமபுரி என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார் அன்றிலிருந்து தற்போது வரையில் படத்தின் தேவைக்கேற்றவாறு கவர்ச்சி காட்டுவதும் தனது திறமையை காட்டி நடிப்பதாக இருந்து வருவதால் தமிழ் தாண்டி மற்ற மொழிகளிலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகின்றன. ஆள் பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக கும்முன்னு இருப்பதால் ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து கொண்டே வருகின்றனர்.

அந்த காரணத்தினால் தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ள ராய் லட்சுமி. தற்போது இவரது கையில் சிண்ட்ரெல்லா , கங்ஸ்டர் 2 ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன மேலும் தெலுங்கில் “ஆனந்தபைரவி” என்ற படத்திலும், கன்னடத்தில் “ஜான்சி ஐபிஎஸ்” என்ற படத்திலும் இவர் தற்போது நடித்து வருகிறார்.அந்த காரணத்தினால் தெனிந்திய சினிமாவில் அதிக படங்களை வைத்திருப்பவர்கள் லிஸ்டில் இவரும் இருக்கிறார்.

இவர் நடிப்பில் “சிண்ட்ரெல்லா” திரைப்படம் வெகுவிரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது. படம் முழுக்க முழுக்க ஹாரர் பேய் படமாக உருவாகி உள்ளதால் ராய்லட்சுமி நடிப்பு இதில் வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது மேலும் பிக்பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  சிண்ட்ரல்லா திரைப்படத்தில் ராய் லட்சுமி மூன்று கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் என கூறப்படுகிறது இந்த படத்தை வினோ வெங்கடேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

சிண்ட்ரெல்லா படக்குழு சமீபத்தில் செய்தியாளர்களை சென்னையில் சந்தித்தது அப்பொழுது படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர் இந்த படம் குறித்து ரோபோ ஷங்கர் சில விஷயங்களை கூறினார் மேலும் நடிகை ராய் லட்சுமி பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ரோபோ ஷங்கர் பல்வேறு டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகள் படங்களில் நடித்து வருகிறார் அதில் ஒன்றுதான் சிண்ட்ரெல்லா திரைப்படம்.

இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில் இந்த திரையரங்குக்கு வருவது மிக்க மகிழ்ச்சி இந்த படத்தில் ராய்லட்சுமி உடன் ஒரு காட்சி இருக்கிறது. அந்த காட்சியில் இரட்டை வசனங்கள் இருக்கும் நான் பேசும்போது எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஆனால் ராய் லட்சுமி அந்த வார்த்தைகளை ரசித்தார். ராய்லட்சுமி ஒரு மெழுகு சிலை போல் அழகாக இருக்கிறார். அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது எனக் கூறிப் புகழ்ந்து பேசினார்.

raai laxmi
raai laxmi