அட நிஜமா இது ரோபோ சங்கர் தானா.! திருமணத்தின் பொழுது எப்படி இருந்திருக்கிறார் பார்த்தீர்களா.!

0

காமெடி நடிகர் ரோபோ சங்கர் முதன்முதலில் சின்னத்திரையில்தான் தனது சினிமா பயணத்தை தொடங்கினார், அதன் பிறகு தனது அயராத உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார்.

பின்பு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் நடன கலைஞராகவும் இருந்து வந்தார், பின்னர் 2002 ஆம் ஆண்டு பிரியங்கா என்ற நடனக் கலைஞரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

robo shankar
robo shankar

அதில் முதல் மகள் இந்திராஜா, இவரை தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என ரோபோசங்கர் கூறியிருந்தார், ஏனென்றால் இவர் பிறந்த பிறகுதான் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும் கூறினார். இவர் மூத்த மகள் இந்திராஜா சமீபத்தில் வெளியாகிய பிகில் திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து விளையாட்டு அணியில் இவரும் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த ஒரு திரைப்படத்தின் மூலம் இவர் ரோபோ சங்கருக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை அடைந்தார், ரோபோ சங்கரின் மகள் இதற்குமுன் டிக்டாக்கில் அடிக்கடி வீடியோவை வெளியிட்டு வந்துள்ளார் இதைப்பார்த்து பிறகுதான் அட்லீ இவருக்கு பிகில் திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

robo shankar
robo shankar

பிகில் திரைப்படத்திற்கு பிறகு தனது மகளுக்கு பல்வேறு படங்களில் வாய்ப்பு வருவதாகவும் ரோபோ சங்கர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார், இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன அந்த புகைப்படத்தில் ரோபோசங்கர் மிகவும் ஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.