திடீரென நடிகர் ரோபோ ஷங்கர் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போய் இருப்பதால் அவர் குறித்து ஏராளமான சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி இவருடைய உடல் இதனால்தான் குறைந்தது என பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் முதன்முறையாக ரோபோ சங்கர் மனம் திறந்து தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரோபோ சங்கர் முதன்முறையாக மிமிக்ரி கலைஞராகத் தான் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, அது இது எது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பல முன்னணி நடிகர்களின் குரலில் பேசி அசத்தி பிரபலமானார்.
இதனை வைத்து தான் இவருக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அப்படி மாரி, விசுவாசம், வேலைக்காரன், பிகில் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. அப்படி ரோபோ சங்கர் அனைத்து படங்களிலும் ஏன் சின்னத்திரையில் இருந்து தற்போது வரையிலும் குண்டாக கொளு கோளுவென இருப்பார்.
ஆனால் சில மாதங்களாக மிகவும் உடல் எடை மெலிந்து காணப்படும் நிலையில் பார்ப்பதற்கே பரிதாபமாக காணப்படுகிறார். இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் பல வதந்திகளை கூறி வந்தார்கள். ஆனால் சமீபத்தில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்ததற்கான காரணம் தனக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவது நேர்காணல் ஒன்றில் ரோபோ ஷங்கர் தான் உடலை எடை கொஞ்சம் குறைப்பதற்காக டயட்டில் இருந்ததாகவும் அப்போது எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டதாகவும் இதனால் உடல் எடையும் குறைந்தாலும் இந்த நோயால் கஷ்டப்படும் போது எல்லாருக்கும் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டதாகவும் அதனால் தான் விரைவில் குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்தவன் தான் என்றும் அதேபோல் தன் மனக்கவலையை போக்கி நோயிலிருந்து வெளிவர காரணமாக இருந்தது காமெடி ஷோக்கள் தான் அதாவது ராமர் காமெடியை பார்த்து உருண்டு உருண்டு விழுந்து சிரித்ததாகவும் கடந்த நான்கு மாதங்களாக காமெடி நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்து தான் பழைய நிலைமைக்கு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.