மாவீரன் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் RK.சுரேஷ்..! மஞ்சள் உடையில் மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

rk suresh kaduvetti movie first look release: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கை வரலாரை திரைப்படமாக எடுத்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவ்வாறு உருவாக்கப்படும் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதன் காரணமாக இந்த திரைப்படங்களும் ஹிட் ஆகிவிடுகிறது.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் பிறந்து பின் மறைந்த வன்னியர் சங்க தலைவரும் சட்டமன்ற உறுப்பிணரும் ஆக இருந்து வந்தவர் தான் ஜெ குரு. இவருக்கு  மாவீரன் ஜெ குரு என பெயர் சூட்டப்பட்டது.

இவ்வாறு பிரபலமான மாவீரன் ஜெ குரு வின் வாழ்க்கை வரலாரை திரைப்படமாக எடுக்க சோலை ஆறுமுகம் அவர்கள் முன்வந்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்கே சுரேஷ் அவர்கள் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது காடுவெட்டி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல்.  இந்த போஸ்டர் இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு பிரம்மாண்டமாக அதிக முதலீட்டை போட்டு எடுக்கப்படும் இந்த திரைப்படம் அவர் மாவீரனாக வலம்வந்து பல போராட்டங்களை கையாண்ட அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளார்கள்.

இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்திற்கு முதலில் மாவீரன் ஜெ குரு என்றுதான் பெயரிடப்பட்டது ஆனால் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த திரைப்படத்தின் பெயர் காடுவெட்டி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பஸ்ட் லுக் போஸ்டரில் காடுவெட்டி குருவைப் போலவே ஆர்கே சுரேஷ் மஞ்சள் உடை அணிந்து அருவாளுடன் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த அரியா காட்சியானது. ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.

rk-suresh
rk-suresh

Leave a Comment