ஆர் ஜே விக்னேஷ் திருமணம் செய்துகொள்ள போகும் பெண் இவர்தான்.! நிச்சயதார்த்தம் முடிந்தது.

0
rj-vignesh
rj-vignesh

தமிழ் சினிமாவில் முதன் முதலில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் விக்னேஷ் காந்த். இந்த திரைப்படம்  அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது அதுமட்டுமில்லாமல் யூடியூபில் மிகவும் பிரபலமானவராக இருந்து வருகிறார்.

மேலும் இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதன்பிறகு நட்பேதுணை, மெஹந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, போன்ற சில திரைபடங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

rj vignesh
rj vignesh

தற்போது அவர் இணையதளத்தில் சில புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்துள்ளார். ஆம் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அவர் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் அமைந்தது கல்யாண தேதி பின்னர் சமூக வலைதளங்களில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

rj vignesh
rj vignesh

அவரது நிச்சயதார்த்தத்தில் பிரபல யுடியூபார்களான மதன் கௌரி, ராஜ்குமார், ரியா, அவரது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள் மற்றும் யூட்யூப் நண்பர்கள் ரசிகர்கள்  அனைவரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.