சமீபகாலமாக திறமையும் பல பிரபலங்கள் வெள்ளித்திரை பக்கம் அடியெடுத்து வைத்து தனது திறமையை மென்மேலும் வெளிக்காட்டி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து சிறப்பாக ஜொலிக்கின்றனர். அந்த வகையில் RJ வாக இருந்து பின் தனது காமெடியின்னாக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்து பின் தனது திறமையை வெளிக்காட்டி.
இயக்குனராக மாறி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் ஆர்ஜே பாலாஜி. தமிழில் இதுவரையில் நானும் ரவுடி தான், எல் கே ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற பல்வேறு படங்களில் காமெடியனாகவும், ஹீரோவாகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக ஆர்ஜே பாலாஜி இருந்து வருகிறார்.
சினிமாவில் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் சேனல் வர்ணனையாளராக வும் பணியாற்றிவருகிறார். இதனால் நாலாபக்கமும் ஆர் ஜே பாலாஜி சம்பளம் வந்த வண்ணமே இருக்கிறது இதோடு மட்டுமல்லாமல் பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி ஒரு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் அதன் புகைப்படம் கூட இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. ஆர் ஜே பாலாஜி விலை உயர்ந்த மினி கூப்பன் காரை வாங்கியுள்ளார் இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்ஜே பாலாஜி மினி கூப்பர் கார் உடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
