எனக்கு இப்படி ஒரு படத்தில் நடித்தது பிடிக்கவே இல்லை என ஓப்பனாக கூறிய ஆர்ஜே பாலாஜி.!

மேலும் தற்பொழுது ஆர்.ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ரன் பேபி ரன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி ஏராளமான சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் தொகுப்பாளர் தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த சமயத்தில் வெறுத்துள்ளீர்களா என கேட்டுள்ளனர். அதற்காக ஒவ்வொரு நாளும் வெறுத்திருக்கிறேன் என் எந்த நண்பர்களுக்குமே நான் நடித்த நண்பன் கதாபாத்திரங்கள் பிடிக்கவே இல்லை. இது முக்கியத்துவம் என்பதை தாண்டி எனக்கு பிடித்திருந்தால் மட்டும் தான் நான் அதை செய்வேன்.

நான் டிவியில் கூட தொகுப்பாளராக பணியாற்றி சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அது பிடிக்காத சமயத்தில் அங்கிருந்து வெளியில் வந்து விட்டேன் அதேபோல் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்தேன் அப்பொழுது கதாபாத்திரத்தில் மிகவும் ஜாலியாக இருந்தது என் அருகிலேயே நடிகர் நடிகைகளை பார்க்க முடிகிறது அதுவே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் தான்.

தீயா வேலை செய்யணும் குமாரு படம் நடிக்கும் பொழுது குஷ்பூ மேடம் வந்தார்கள் குஷ்பூ மேடம் வந்து இருக்கிறார்கள் நமது படத்தை அவர் தான் தயாரிக்கிறார்கள் என மிகவும் ஆச்சரியத்தோடு இருந்தேன் இப்படி பக்கத்தில் இருந்தவர்களை பார்க்கும் ஆச்சிரியத்திலேயே ஒரு 15-20 படங்கள் போய்விட்டது முடியும் பொழுது நம்மளுடைய வேலை நன்றாக இல்லையே என தெரிந்த போது அதில் இருந்து விலகி வந்துவிட்டேன்.

அதனால் நண்பர்கள் கதாபாத்திரத்தை நடித்த பொழுது நான் மிகவும் சந்தோஷப்பட்டது இல்லை ஆனால் அதன் மூலம் பெற்ற நண்பர்கள் வட்டாரத்தை நினைத்து நான் மிகவும் மகிழ்ந்தேன். நான் ஒரு ஹீரோவுக்கு நண்பனாக நடித்த போதுதான் எனக்கு ஒரு கௌதம் கார்த்திக் என்ற நண்பர் கிடைத்தார். அதர்வா, ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி இவர்களுக்கிடையே நட்பெல்லாம் அந்த ஒரு பயணத்தின் பொழுதுதான் எனக்கு கிடைத்தது இந்த மக்களை தெரிந்து கொண்டதில் நான் சந்தோஷமாக இருந்தேன் ஆனால் அந்த கதாபாத்திரத்தை நடிக்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment