சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் பலரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் நாள்தோறும் தங்களுடைய அன்றாட வாழ்வில் நடைபெறும் ஏராளமான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் விஜய் டிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ரித்திகா.
இவர் விஜய் டிவியில் நம்பர் ஒன் காமெடி ஷோவாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். மேலும் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் கூட இந்நிகழ்ச்சிதான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது இதனை அடுத்து தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த சீரியலில் சிறிய வயதிலேயே திருமணம் நடந்தது போலவும் அவருடைய கணவர் திருமணமான அடுத்த நாளை இறந்து விட்டதாகவும் எனவே விதவை கதாபாத்திரத்தில் அமிர்தா நடித்த வருகிறார் இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார் இந்நிலையில் எதார்த்தமாக அமிர்தாவை பார்க்கும் எழில் காதலிக்க தொடங்குகிறார் பிறகு அமிர்தா விதவை என தெரிந்து கொண்டும் திருமணம் செய்து கொள்வதற்கு ஒப்புக்கொள்கிறார்.

இதனை எழில் பாக்யாவிடம் கூற பாக்கியா இதற்க்கு ஒப்புக்கொண்டாலும் ஈஸ்வரி வேறு ஒரு பெண்ணை எழிலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ரித்திகா சமீபத்தில் விஜய் டிவி பிரபலம் ஒருவரை மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்து கொண்டார். பிறகு சென்னையில் ரிசப்ஷன் வைத்த நிலையில் அதில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் பங்கு பெற்றார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் திருமணம் முடித்த கையோடு ரித்திகா தன்னுடைய கணவருடன் மாலத்தீவு சென்றுள்ளார் மேலும் அங்கு இருக்கும் ஏராளமான புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறிய வருகிறார்கள்.