பழனி படிக்கட்டு போல் சிக்ஸ் பேக் வைத்து சட்டையை தூக்கி காட்டும் ரித்திகா சிங்… நடிகர்களையே ஓரங்கட்டும் புகைப்படம்..

ritika singh : நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர், இவர் சுதா கொங்கார இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகிய இறுதி சுற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது அது மட்டுமில்லாமல் இறுதி சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நாசர், ராதாரவி, ஜாகிர் உசேன், காலி வெங்கட் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். மேலும் இறுதி சுற்று திரைப்படத்தை தொடர்ந்து ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, குரு சிவலிங்கம், ஓ மை கடவுளே, கோலை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 170 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் கண்டிப்பாக இவரின் கதாபாத்திரம் போல்டான  கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது, இந்த நிலையில்  தலைவர் 170 திரைப்படத்தை மிகப்பெரிய நம்பிக்கையாக நினைக்கிறார். சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர்.

சமூக வலைதளத்தில் அடிக்கடி குட்டையான ஆடை அணிந்தும் வீடியோவை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது சிக்ஸ் பேக் வைத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாய் பிளந்துள்ளர்கள்  அந்த அளவு நடிகர்களுக்கு இணையாக சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

ritika singh
ritika singh
ritika singh
ritika singh