சிறகடிக்க ஆசை சீரியலில் அருணின் அம்மாவாகவும் சீத்தாவின் மாமியாராகவும் நடித்து வந்தவர் தான் ராஜலட்சுமி இவர் இதற்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் சமையல் கலைஞர்களில் ஒருவராக நடித்து வந்தவர்.
சிறகடிக்க ஆசை சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு இவரின் காட்சிகள் இருந்தது ஆனால் தற்பொழுது இவரின் காட்சிகள் கிடையாது இந்த நிலையில் நடிகை ராஜலட்சுமி வீட்டில் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். சீரியல் நடிகையின் மறைவு குறித்து அவருடன் நடித்த சக நடிகைகள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கம்பம் மீனா தன்னுடைய இன்ஸ்டால் ராஜகுறித்து வருத்தமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் அதில் கூறுகையில் உங்கள் மகளுக்கு பெரியவளான நிகழ்ச்சி உள்ளது பத்திரிக்கை வைக்க வருகிறேன் எனக் சொன்னியே அதற்குள் உயிரை விட்டுட்டாயே என மிகவும் சோகமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ஏன் ராஜி இப்படி பண்ணின ….
என்ன பிரச்சனை இருந்தாலும் தற்கொலை தான் தீர்வா…?
நீ எவ்லோ தைரியமான பொண்ணு ,
எவ்லோ போல்டா எல்லாத்தையும் பேசுவ…
நான் ஒரு ஆளு 10 ஆம்பளைக்கு சமம்னு சொல்லுவியே……
எம்பொண்ணுக்கு சடங்கு பங்சன்க்கா இன்விடேசன் குடுக்கனும் வர்றேங்கானு சொன்னியே……
இப்ப உன் பொண்ண பத்திகூட யோசிக்காம இந்த முடிவு எடுத்திட்டியே ராஜி….மனசு வலிக்குது…
என்னதான் தைரியமானவங்களா இருந்தாலும் மனசு வெறுத்துட்டா அவ்லோ தானா…..
வாழவும் விடாத சாகவும் விடாத இந்த கேடு கெட்ட சமூகத்துல வாழவே கூடாதுனு முடிவு பண்ணிட்டியா…?
ஒருத்தர மிதிச்சு ஒருத்தர கெடுத்து தான் முன்னேற முடியும்ங்கிற சமூகம் வேணாம்னு இந்த முடிவு எடுத்துட்டியா…..?
எப்படி இருந்தாலும் நீ தைரியமானவள் தான் …..
ஏன்னா ..
தன் உயிரை மாய்ச்சுகிறதுக்கும் தைரியம் வேணும்ல …….
சரி ராஜி அங்கபோயாவது நிம்மதியா இரு …
உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன்…