ரியோ ராஜ் நடித்திருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் பட டீசர்.!

நடிகர் ரியோ ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் இவர் முதன்முதலில் சின்னத்திரையில் தான் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முதன் முதலாக கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் தற்பொழுது அடுத்ததாக பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் ரியோ ராஜ் உடன் இணைந்து ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

மேலும் பாலசரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, நரேன், ரேகா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், இதனாலேயே இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வழியாக சில நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Comment