அஜித் மச்சானுடன் நடிக்கும் யாஷிகா ஆனந்த்.! படத்தின் பெயர் என்ன தெரியுமா.? வைரலாகும் புதிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி. இவர் ஆரம்பத்தில்  தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்தார்.  தமிழில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி என்னும் படத்தில்  ஹீரோவாக நடித்து அறிமுகமானார்.

படம் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி பெரிய அளவில் வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து உடனே மோகன் ஜி உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து ருத்ரதாண்டவம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரிஜெக்டரிஷி மிரட்டினார் இந்த படமும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில் இ ஸ்கொயர் ப்ரொடக்ஷன் யுகே மற்றும் புன்னகை பூ கீதா பிரசன்ட் ஃபிலிம் மேக்கர் விஜய் பரத்வாஜ் இயக்கத்தில்  உருவாக உள்ள திரைப்படம் சில நொடிகளில்.. படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடிக்கிறார்.

அவருடன் இணைந்து புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் படம் முழுக்க முழுக்க மிஸ்டரி ட்ராமா கதையாக உருவாகி வருகிறது. படத்தின் சூட்டிங் பல முக்கிய இடங்களில் எடுக்கப்பட்டு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அந்தப் படத்திலிருந்து ரிச்சர்ட் ரிஷி , யாஷிகா மற்றும் சிலர் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து  இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள்  செம்ம அழகாக இருக்கிறீர்கள் வேற லெவல் எனக்கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Richard rishi and yashika anand
Richard rishi and yashika anand
richar rishi
richar rishi