ரேவதியை தமிழ் சினிமாவில் தூக்கிவிட்ட 6 திரைப்படங்கள்.! மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் திரைப்படம்

0

அந்த காலகட்டத்திலேயே அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ஒரு நடிகை என்றால் அது ரேவதி தான்.  அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார்.

ரேவதியின் 6 ஹிட்டான திரைப்படங்கள் இதோ தரவரிசையில் காணலாம்.

புதுமைப்பெண்: ரேவதி மற்றும் பாண்டியன் இவர் இணைந்து நடித்து மாபெரும் ஹிட்டான திரைப்படம் தான் புதுமைப்பெண்.  இத்திரைப்படத்தை பாரதிராஜா  இயக்கத்தில் வெளியானது அதுமட்டுமல்லாமல் ரேவதிக்கு  ஒரு தனிப் பெயரும் பெற்று தந்தது.

புதுமைப்பெண் படத்தின் காமெடி காட்சியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வைதேகி காத்திருந்தாள்: திரைப்படம் விஜயகாந்த் மற்றும் ரேவதி நடிப்பில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேலாக ஓடிய திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள். இத்திரைப்படத்தில் உள்ள ” காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி” இந்த பாடல் இன்றளவிலும் ரசிகர்கள் கேட்கும் பாடலாக அமைந்தது.

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தை பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஆண்பாவம் : பாண்டியன்,  பாண்டியராஜன் மற்றும் ரேவதி இவர்கள் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆண்பாவம். இந்த பட காமெடிகள் அணைத்து ரசிக்கும் படி அமைந்தது  இப்படத்திற்கு பிறகு ரேவதிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

ஆண்பாவம் படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

உதயகீதம் : மோகன் மற்றும் ரேவதி  நடித்து வெளியான இத்திரைப்படம்  உதய கீதம் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் மூலம் ரேவதிக்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

உதயகீதம் படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மௌன ராகம்: மோகன் மற்றும் ரேவதி இவர்கள் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம்தான் மௌன ராகம். இத்திரைப்படம் இன்றளவிலும் ரேவதிக்கு ஒரு மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்தது.

மௌனராகம் திரைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அரங்கேற்ற வேளை : பிரபு மற்றும் ரேவதி அவர்கள் நடித்து வெளிவந்து மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம்தான் அரங்கேற்ற வேளை. இப்படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு இருந்தது. அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வி கே ராமசாமியுடன் ரேவதி செய்யும் சேட்டை இன்றளவிலும் ரசிகர்கள் பார்த்து குலுங்க குலுங்க சிரிக்கும் வகையில் இருந்து வருகிறது.

அரங்கேற்ற வேளை படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.