அருண் விஜய் இரட்டை வேடத்தில் ஏற்கனவே தடம் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கொடுத்தார் இந்நிலையில் மீண்டும் இரட்டை வேடத்தில் மான் கராத்தே இயக்குனர் கிரிஷ் திருமுருகன் இயக்கத்தில் ரெட்ட தல திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்த இல்லையா என்பதை இங்கே காணலாம்.
அருண் விஜய் மற்றும் சிட்தி இருவரும் அப்பா அம்மா இல்லாமல் பாண்டிச்சேரியில் வாழ்ந்து வருகிறார்கள். அருண் விஜய் பல வருடம் கழித்து திருமணம் செய்ய வருகிறார் அதேபோல் சிட்தி மாடலாக வேண்டும் என்ற ஆசைப்பட்டு ஹோட்டலில் வெயிட்டராக இருக்கிறார்.
அதேபோல் அருண் விஜயின் காதலி கோடீஸ்வரராக வாழ வேண்டும் என்று ஆசை அந்த நேரத்தில் அருண் விஜய் தன்னை போலவே இருக்கும் கோடிஸ்வரன் அருண் விஜய் ஒருவரை சந்திக்கிறார் இருவரும் நட்பாகிறார்கள். சிட்தி ஏழ்மையாக இருக்கும் அருண் விஜய்க்கு பணக்காரராக இருக்கும் அருண் விஜயை கொல்வதற்கு ஐடியா கொடுக்கிறார்.
அப்படி கொன்று விட்டால் அந்த பணத்தை நாம் அனுபவிக்கலாம் எனவும் ஆசை காட்டுகிறார். அதேபோல் அவரைக் கொன்று விடுகிறார். பிறகு தான் தெரிகிறது இறந்து போற அருண் விஜய் பரோலில் வந்தவர் அவரும் ஒரு பெரிய ஹிட்மேன் என்று பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அருண் விஜய் எடுக்கும் ஒவ்வொரு முடிவே படத்தின் மீதி கதை.
பொதுவாக ஆக்ஷன் திரைப்படம் என்றாலே அருண் விஜய்க்கு அல்வா சாப்பிடுவது போல் ஆக்ஷன் காட்சிகளில் அடித்து தூள் கிளப்புகிறார். ஒரு பக்கம் ஹிட் மேன் மற்றொரு பக்கம் காதலிக்காக வாழும் அருண் விஜய் என இரண்டு கதாபாத்திரம் இருந்தாலும் பெரிதாக ஒன்றும் ஆனால் ஆட்டிட்யூட்டில் தூள் கிளப்புகிறார். காசு காசு என காதலை ஆயுதமாக வைத்து அருண் விஜயை எந்த அளவுக்கு தள்ளுகிறார் நாயகி சிட்தி ஆனாலும் இந்த வில்லத்தனம் அவருக்கு பெரிதாக பொருந்தவில்லை.
ஆக்ஷன் காட்சிகளில் அருண் விஜய் தூள் கிளப்புகிறார் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும் அருண் விஜய் இருவரும் சந்தித்துக் கொண்ட பிறகு படம் சூடு பிடிக்கிறது அதே போல் படத்தின் கடைசி 30 நிமிடம் சீட்டின் நுனியில் உட்கார்ந்து விறுவிறுப்பாக பார்க்க வைக்கிறது..