ரெட்ட தல திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் வாரிசுகள் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் வெற்றியடைந்தார்கள் என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் நடிகர் அருண் விஜய் மிகவும் எளிதாக சினிமாவில் நுழைந்து விட்டார் ஆனால் வெற்றியை அவ்வளவு எளிதாக அடைய முடியவில்லை.

வெற்றி பாதை அடைய மிகவும் கஷ்டப்பட்டார் அவருக்கு உறுதுணையாக இருந்தது அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படம் தான். இந்த திரைப்படத்திற்குப் பிறகு அருண் விஜய்க்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு அருண் விஜய் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் நடித்த ரெட்ட தல திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன் சித்தி இத்தானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது இந்த நிலையில் முதல் நாள் முடிவில் இந்த திரைப்படம் 75 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.