ஹிட் சீரியலான பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரிட் நடிகை விலகி விட்டாரா.! அதிர்ச்சி அளிக்கும் தகவல்

தற்பொழுது முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருப்பது ஜி தமிழ் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கு சீரியல் பூவே பூச்சூடவா. இந்த சீரியல்  குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக விளங்குகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பல திருப்பலங்குடன் சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி பாதியிலேயே முடிந்து விட்டதாக சில தகவல் வெளிவந்தது. அதன்பிறகு அது வெறும் பொய்யான தகவல் என்று கூறியிருந்தார்கள் தற்போது வரையிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் ஹிட் பெறுவதற்கு முக்கிய காரணம் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரேஷ்மா. இவரின் சிறந்த நடிப்பின் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ளார்.  அதோடு இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார்.எனவே இவர் நடித்து வரும் இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் தங்களது பேராதரவை அளித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ரேஷ்மா இந்த சீரியலில் இருந்து விலகுவதாகவும் இவர் நடித்துவரும் சக்தி கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக விஜய் டிவியில் அரண்மனைக்கிளி சீரியலில் நடித்து வந்த கதாநாயகி நடிக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டு இருந்தது.

எனவே இவருடைய ரசிகர்கள் பலரும் ஏன் இந்த சீரியலில் இருந்து விலகுறீங்க  விலகாதீங்க என்று சோசியல் மீடியாவில் கூறி வந்தார்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில் ரேஷ்மா உண்மையில் இந்த சீரியலில் இருந்து நான் வெளியேறவில்லை இது வதந்தி மட்டுமே யாரும் நம்ப வேண்டாம் என்று தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

reshma 2
reshma 2

Leave a Comment