பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகும் ரேஷ்மா.! அவருக்கு பதில் இதற்கு மேல் இவர் தான்..

0
baakiyalakshmi
baakiyalakshmi

தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி நாள்தோறும் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதாவது படிப்பறிவு இல்லாத குடும்பத்தலைவி தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் சுவையாக சமைத்து தந்து அவர்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார் ஆனால் இதனைப் பொருட்படுத்தாத குடும்பத்தினர்கள் அவரை அவமானப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் குடும்ப தலைவனான கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை காதலித்து பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது கோபி ராதிகா மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் கோபி தொடர்ந்து பாக்யாவிற்கு பிரச்சனை தந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது பாக்கியா தங்கி இருக்கும் வீடு என்னுடையது தான் எனவே நான் அதை விற்க முடிவு செய்துள்ளேன் என கூறிய நிலையில் பாக்கியா எப்படியாவது வீட்டை மீட்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இவ்வாறு இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் ராதிகா என்ற கேரக்டரில் ரேஷ்மா நடித்து வருகிறார். இவருக்கு முன்பு இந்த கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமான காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகினார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரேஷ்மா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதால் இந்த சீரியலில் இருந்து விலங்கு போவதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகி உள்ளது.

எனவே இந்த சீரியலில் தற்பொழுது ரேஷ்மா நடித்து வந்த ராதிகா கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வருகிறது. இவ்வாறு இதனை அடுத்து விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.