தற்கொலை முயற்சி செய்த ரேணிகுண்டா திரைப்பட நடிகை!! காரணம் இதுதான்.

renugunda movie actress sanusha attempt suicide: சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைப்பிரபலங்கள் என பலர் மன உளைச்சல் காரணமாக தற்போது தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில் ரேணிகுண்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சனுஷா தற்கொலை முயற்சி செய்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக இவர் இப்படி ஒரு முடிவினை செய்ததாக தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து தனது தம்பியை நினைத்து முடிவை மாற்றிக் கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த போராட்ட சமயத்தில் படவாய்ப்பு  இல்லாததால் மனஅழுத்தம் ஏற்பட்டு இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் தன்னை போல் யாரும் இது போன்ற ஒரு முடிவை எடுக்க கூடாது எனவும் அவர் இந்த செய்தியை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்படி மன அழுத்தம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் அனைத்தும் சரியாகிவிடும் என இவர் மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார். மேலும் ரசிகர்கள் சிலர் இந்த சின்ன வயதிலேயே நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சி செய்வது கோழைத்தனம் எனவும் கூறியுள்ளனர்.

Leave a Comment