எனக்கு கல்யாணம் என்று பைத்தியக்கார கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மார்த்தாண்டன் நடிகரை ஞாபகம் இருக்கிறதா.? அதுவும் இவர் தற்போது எப்படி உள்ளார் பார்த்தீர்களா.?

0
marththandam
marththandam

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பல காமெடி நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக முடித்துவிட்டு சம்பளத்தை வாங்கி கொண்டு தான் உண்டு தன் வேலை என்று பார்க்கிறார்கள் ஆனால் அவர்களெல்லாம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்க முடியவில்லை.

சொல்லப்போனால் அந்த காலத்தில் நடித்த காமெடி நடிகர்களை விட இவர்கள் எவரையும் மக்கள்கள் விரும்பி இவர்கள் நடித்த திரைப்படங்களைப் பார்ப்பது இல்லை ஆனால் அந்த காலத்தில் பல காமெடி நடிகர்கள் நடித்த பல திரைப்படங்களையும் மக்கள் வியந்து பார்த்து வந்தார்கள்.

அந்த வகையில் மக்கள் மத்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் என்றும் நிலைத்து நிற்பவர் தான் நடிகர் மார்த்தாண்டன் என்பவர் இவர் குஷ்பூ,பிரபு மற்றும் ராதாரவி நடிப்பில் வெளியான சின்னத்தம்பி திரைப்படத்தில் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் என்று பைத்தியக்கார கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவர் நடித்த அந்த கதாபாத்திரம் மக்களை மிகவும் கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் மந்திரவாதி,வில்லன் போன்ற பல கதாபாத்திரங்களை கொண்டு பல வருடமாக நடித்து வந்தார் ஆனால் தற்போது இவரை சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை இந்நிலையில் சமீபத்தில் தனியார் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் மகேந்திரன் அவர்களை சந்தித்து உள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் மார்த்தாண்டன் தான் என அடித்துக் கூறி வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இவரது உடல்நிலை தற்போது சரியாக இருக்கிறது இவர் மட்டும் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தால் இவர்தான் தற்போது காமெடி நடிகர்களில் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விலங்கி விடுவார் என்று கூறிவருகிறார்கள்.