வெளியானது இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்.! வெளியேறப் போகும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.?

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட்டுக்கு தேர்வான போட்டியாளர்கள் தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் ஆறாவது வருடத்தில் கால் தடம் பதித்துள்ளது இந்த நிலையில் இந்த போட்டி 45 நாட்களைக் கடந்து எட்டாவது வாரத்திற்கு அடி எடுத்து வைத்துள்ளது. அதேபோல் இந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியே சென்று விடுகிறார்கள் தற்பொழுது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 14 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த நிலையில் ஏழாவது வாரத்தில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சரியாக விளையாடி இன்னும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அப்படி இருக்கும் நிலையில் இதுவரை ஜிபி முத்து,  கோளாறு, நிவிஷா ராபர்ட் மாஸ்டர் என பல போட்டியாளர்கள் வெளியான நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த லிஸ்டில் ஜனனி, குயின்சி, மைனா, கதிரவன், ரக்ஷிதா, தனலட்சுமி ஆகிய போட்டியாளர்கள் எலிமினேஷன் லிஸ்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இலங்கைப் பெண்ணான ஜனனி முறையாக விளையாடவில்லை எனவும் அவரின் உண்மையான முகத்தை காட்டவில்லை எனவும் கதிரவன் குற்றம் சாட்டியுள்ளார் அதுமட்டுமில்லாமல் குயின்ஸி மக்கள் வாக்குகளை பெறுவதற்காக நடித்துக் கொண்டிருக்கிறார் எனவும் ஆசிமும் குற்றம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இனி வரும் வாரங்களில் மாற்றங்கள் வேண்டும் என்பதற்காக மக்கள் முன்வைத்த நிபந்தனையை தற்பொழுது போட்டியாளர்கள் ஓபன் நாமினேஷன் செய்து கொள்கிறார்கள் அந்த வகையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment