மிரட்டலாக வெளியாகியது வலிமை திரைப்படத்தின் பஸ்ட் சிங்கிள்.! நாங்க வேற மாறி.

தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் தல அஜித் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த ஒரு சில திரைப்படங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகப் பெரிய நடிகராக தற்போது தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சினிமாவையும் தாண்டி இவர் நிறைய ஏழை எளிய மக்களுக்கு ஒரு உதவி என்றால் உடனே யோசிக்காமல் செய்யும் குணம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் சினிமாவையும் தாண்டி பைக் ரேஸ்,கார் ரேஸ்,துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவார் என்பதும் மக்களுக்கு தெரிந்த விஷயம் தான்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் என்றால் அது நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தின் மூலம் தல அஜித் பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்று விளங்கி வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பொழுது பல கோடி வசூல் செய்துவிட்டது அதையும் தாண்டி இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் மக்களுக்கு பிடித்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் 10 சதவீத காட்சி மட்டும் எடுக்காமல் இருக்கும் நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை சமீபத்தில் தான் படக்குழு ரசிகர்களுக்கு வெளியிட்டார்கள்.

ஆனால் சமீபத்தில் வலிமை படத்தின் முதல் சிங்கிள் இன்று இரவு பத்து நாற்பத்தி ஐந்து மணி அளவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்கள் அந்த வகையில் தற்போது வலிமை படத்தின் முதல் சிங்கிள் வெளியாகிவிட்டது.

ஆம் இந்த முதல் பாடலில் தல அஜித் மிகவும் அட்டகாசமாக இருக்கிறார் மேலும் நாங்க வேற மாதிரி என ஆரம்பித்ததால் வலிமை திரைப்படத்தை பார்ப்பதற்கு தல அஜித் ரசிகர்கள் மிக ஆவலாக இருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அஜித்தின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

Leave a Comment