விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து வெளியானது !!அண்ணாத்த சேதி என்ற பாடல்.!! வீடியோ இதோ.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிக்கும் திரைப்படங்களில் கதைகள் வித்யாசமாக இருக்கும். மேலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதற்கேற்றார் போல் நடிப்பதில் வல்லவர். பொதுவாகவே நடிகர்கள் என்றால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று ஒத்தகாலில் நிற்பார்கள். ஆனால் இவரோ சற்று வித்தியாசமாக கதை பிடித்திருந்தால் எந்த  கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நடித்து வெளியாக காத்திருக்கும் க/பெ. ரண சிங்கம், துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்கள் கொரோனாவால் ரிலீஸாக முடியாமல் தள்ளி போனது.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்திலிருந்து அண்ணாத்த சேதி எனும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், அதிதி ராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் போன்றோர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை96 புகழ் கார்த்தி நேத்தா எழுதியுள்ளார். மேலும் இப்பாடலை கோவிந்த வசந்தின் இசையில் ராப் இசை பாடகர் அறிவு இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலில் நிறைய கருத்துக்கள் உள்ளதால் ரசிகர்களுக்கு இது ஒரு உந்துகோலாக உள்ளது. இப்பாடலின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகிறது.

 

Leave a Comment