காத்துவாக்குல இரண்டு காதல் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.!

0

கொரோனா தொற்று மிகவும் அதிகமாக பரவி வந்ததால் ஏராளமான தொழில்கள் தொடங்கப்பட்டது. அதோடு ஏராளமானோர் உண்ண உணவு இல்லாமல் தவித்து வந்த நிலையில் சமீப காலமாகத்தான் கொரோனா தொற்று பரவல் சீராக இருந்துவரும் நிலையில் ஒரு வருடம் கழித்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறோம்.

அந்த வகையில்  கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இதன் காரணமாக தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடி வழியாக வெளியானது. திரையரங்குகளில் பார்ப்பது போல் இல்லாமல் இருந்தாலும்  ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக தியேட்டர்கள் திறக்கப்பட்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ்சாகி வருகிறது.

இவ்வாறு தியேட்டர்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளியாகுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நெற்றிக்கண்,விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த அனபெல்லா சேதுபதி மற்றும் துக்ளக் தர்பார்,கவின் நடிப்பில் உருவான லிப்ட் போன்ற திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மூன்று நட்சத்திர பட்டாளங்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால்  அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல  Letsottglobal நிறுவனம் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.  ஆனால் படக்குழுவினர்கள் இதனைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.