தனது சிறுவயது ஆசையை தற்பொழுது நிறைவேற்றிக் கொண்ட ரெஜினா.! புகைப்படத்தை பார்த்து சிலிர்த்து போன ரசிகர்கள்.!

நடிகை ரெஜினா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர், இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தார். ஆனால் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகுதான் பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார், மேலும் இவர் மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் ரெஜினா தற்போது கைவசம் பல திரைப்படங்களை வைத்துள்ளார், அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கர, கள்ளபார்ட், கசட தபர ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா  அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ரெஜினா தனது உடல் எடையை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர் அதை யாராலும் மறுக்க முடியாது,  அதுமட்டுமில்லாமல் தனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ஆசை இருப்பதாகவும் அதை தற்பொழுது நிறைவேற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது சர்ஃபிங் விளையாட்டில் தனக்கு ஆசை இருந்ததாகவும், என்னை போல் நீங்களும் சென்னையில் வசித்து வந்தால் செக்பேட்டோ கோ பார்க்கிங் தீவு உங்களுக்கும் பிடித்துப் போகும்,  இந்த தீவில் உடற்பயிற்சி செய்வதற்கு தனக்குப் பிடித்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

regina-surfing
regina-surfing

Leave a Comment