ஆரவ் திருமணம் குறித்து விரக்தியில் ஓவியா போட்ட ட்வீட். !! கமெண்டுகளை குவிக்கும் ஓவியா ஆர்மியினர்.

0

oviya tweet viral:ஓவியா என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவுக்கு அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பிக்பாஸில் கலந்துகொண்டு பல ரசிகர்களை தன் வசம் இழுத்தார் அதுமட்டுமல்லாமல் முதன்முதலில் உலகெங்கும் ஓவியா ஆர்மி என்ற ஆர்மி  இவருக்கு தான் செயல்பட்டது.

இவர் பிக்பாஸில் இருக்கும்போது ஆரவை காதலித்தார். இவர்கள் இருவரும் மருத்துவ முத்தம் கொடுத்துக்கொண்டது உலகம் அறிந்ததே. பிக்பாஸில் இருக்கும்போது ஓவியா சூசைட் பண்ணிக்கொள்ள போனதால் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். பிக்பாஸ்க்கு பிறகு ஆரவ்வும் ஓவியாவும் இணைந்து ஊர் சுற்றிய புகைப்படங்களை பதிவிட்டு இருந்தனர்.

ஆரவ் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். அதுபோல ஓவியாவும் 90 ml  என்ற படத்தில் நடித்து தன் பெயரை கெடுத்துக் கொண்டார். இந்தப் படத்தில் நடித்ததால் இவருக்கு எதிராக பல சர்ச்சைகள் கிளம்பி வந்தது. பிக் பாஸ் இந்த வெளிவந்த பிறகு இவருக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது ஆனால் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாததால் தற்போது வீட்டிலேயே உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது காதலனான ஆரவ்க்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் வந்திருந்தனர். ஓவியா மட்டும் வரவில்லை. ஓவியா ட்விட்டரில் தனது காதல் பற்றி ஏதாவது பதி விடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த உலகம் மிகவும் ஆபத்தானது, அது தீமை செய்பவர்களால் அல்ல. அதை பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களால் தான் என பதிவிட்டு இருந்தார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.