மீண்டும் ஒரு குளிர்சாதனை பேட்டி வெடித்தது.!

0
fridge-blast
fridge-blast

சென்னையில் சமீபத்தில் குளிர்சாதனைப்பெட்டி வெடித்து பெரும் விபத்துக்குள்ளாகியது அனைவருக்கும் தெரிந்தது தான் இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது குளிர்சாதனைப்பெட்டி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஊரணி பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜானகி, இவர் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார் அப்போது அங்கு திடீரென மின்தடை ஏற்பட்டது பின்பு மின்சாரம் வந்த பொழுது ஜானகி வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்து அங்கு தீ பரவியது இதனால் அந்த இடத்தில் உள்ள மக்களிடம் பெரும் பதற்றம் நிலவியது.

இதனால் மக்கள் பயந்து போய் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர், இந்த குளிர்சாதனப்பெட்டி வெடித்த பொழுது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

ஏற்கனவே சென்னையில் குளிர்சாதனப் பெட்டியை வெடித்து ஒரே வீட்டில் 3 பேர் மூச்சுதிணறி உயிரிழந்தனர் இது மறைவதற்குள் அடுத்த ஒரு சம்பவமும் இதேபோல் நிறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் பதற்றத்தில் இருக்கிறார்கள்.