தென்னிந்திய சினிமாவில் பல புதுமுக நடிகைகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற்று விடுகிறார்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறவேண்டும் திறமை இருக்கும் நடிகைகள் மட்டும்தான் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெறுகிறார்கள்.
அதேபோல் இளம் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது ஆரம்ப காலகட்டத்தில் நடித்த ஒரு சில நடிகைகள் இன்று சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர்தான் ரீமா சென். இவர் தமிழ் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த நடிகை.
கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியாகிய மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரீமா சென். இவர் முதல் திரைப்படத்திலேயே மிகவும் பிரபலமாகி விட்டார் அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியாகி பகவதி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து நடித்து வந்த ரீமாசென் ஒரு காலகட்டத்தில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஆக அமைந்தது அதுமட்டுமில்லாமல் மின்னலே திரைப்படத்தில் வசீகரா பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி மிகப்பெரிய வைரலானது. மேலும் ரீமாசென் விஜய் விக்ரம் சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் விஷால் நடிப்பில் வெளியாகி செல்லமே திரைப் படத்திலும் நடித்திருந்தார்.மேலும் சிம்புவின் வல்லவன் திரைப்படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். நெகட்டிவ் ரோல்களை கூட விட்டுவைக்காத ரீமாசென் தொடர்ந்து நடித்து வந்தார் பின்பு 2016ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ருத்ரவீர் என்ற மகனும் இருக்கிறார்.

ரீமாசென் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள் ஏனென்றால் ரீமாசென் அவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டு ஆன நிலையில் அதனை கொண்டாடியுள்ளார் அப்போது எடுத்த எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 10 வருடத்திற்குள் இப்படி ஆகி விட்டீர்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

