மனைவியின் கோபத்தை குறைக்கவும், நல்ல புரிதல் ஏற்படவும்.! இந்த சின்ன விஷயத்தை செய்ய வேண்டும் கணவன் மார்கள்.

கணவன் மனைவிக்கு இடையே ஒரு புரிதல் இருக்க வேண்டியது எப்பொழுதும் அவசியம் காரணம் ஏனென்றால் புரிதல் இல்லாவிட்டால் உங்களுக்குள் வரும்  பிரச்சனைகளை சரிவராது. ஒரு சரியான தீர்வை எடுப்பதற்கு இன்னு ஒரு  பிரச்சனையை உங்களை தூக்கி சாப்பிட்டு விடும். நல்ல புரிதல் இருந்தால் ஒரு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கலாம் அதற்கான டிப்ஸ்களை இங்கே பாருங்கள்.

1. காலையில் தூங்கி எழுந்தவுடன் கணவன் மார்கள் மனைவியை பார்த்து ஒரு சின்னப் புன்னகை முகத்துடன் குட்மார்னிங் அல்லது காலை வணக்கத்தை சொல்வது நல்லது அதோடு மட்டுமல்லாமல் லைட்டாக அரவணைத்து ஒரு குட்மார்னிங் சொன்னால் அல்லது வணக்கம் சொன்னால் உங்களுக்கு இருவருக்குமான புரிதல் சற்று நன்றாக இருக்கும்.

2. காலையில் எழுந்தவுடன் பெண்கள் குழந்தைகளையும் கணவருக்கும் சமைப்பது கொடுப்பது மற்ற வேலைகளை தொடர்ந்து செய்வதால் அவர்கள் ஒரு கட்டத்தில் முடியாமல் எரிச்சல் அடையவார்கள் அப்படி அவர்களுக்கு முடிய வில்லை என்றால் உடனடியாக அவருக்கு உதவியை செய்து அந்த சுமையை குறைக்க உதவுகள் அது  பாசத்தை அதிக படுத்தும் அதே சமயம் தனக்கு அக்கறை காட்டுகிறார் என்ற எண்ணம் தோன்றும்.

3.  கணவன் மனைவி இருவரும் ஒரே குளியல் அறையில் குளிப்பது நல்லது.அப்படி இருவரும் இணைந்து குளித்தால் இருவருக்கும் இடையான பாச பிணைப்பு பல மடங்கு அதிகரிக்கும் இதனால் பிரச்சனைகள் உங்களிடத்தில் வராது அப்படியே வந்தாலும் உங்கள் மீதும் உள்ள பாசத்தின் காரணமாக பறந்து ஓடும்.

4.  சாப்பிடும் பொழுது எப்பொழுதும் மனைவியுடன் சேர்ந்து ஒன்றாக சாப்பிடும் பழக்கத்தை முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் இருவரும் ஒரே சமயத்தில் ஒரு சார்ந்து சாப்பிடும் போது காமெடி, சந்தோஷமான விஷயத்தை பேசவும் அதேசமயம் சில சிறப்புக்குரிய நிகழ்ச்சிகளை பேசி அவரை கவர வேண்டும்.

தேவையில்லாத பேச்சுகளை பேசக்கூடாது கோபமாக ஆக்க கூடாது இது போன்ற செயல்களை சாப்பிட போகும்போது தவிர்ப்பதே நல்லது உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களையும் ஒன்றாக சேர்ந்து ரவுண்டாக வட்டம் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவது சிறந்தது. காரணம் நம் கணவர் அனைவரையும் அரவணைத்து பார்த்துக் கொள்கிறார் என்ற எண்ணம் மனைவி மீது தோன்ற ஆரம்பிக்கும்.

5. கணவன் மனைவி மார்கள் ஆரம்பத்திலிருந்து கடைசி வரையும் எப்பொழுதும் மனைவியே அரவணைப்பது கையை பிடித்து பேசுவதுமாக இருந்தால் அவர்கள் உங்கள் இடத்தில் இருக்கும் சின்ன கோவமும் பஞ்சாய் பறந்து போகும் மற்றும் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும் அது உங்களுக்கு நல்லது உங்க வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும் என கூறுகின்றனர்.