தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருவாரா சூர்யா!!

சூர்யா அவர்கள் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் இப்பொழுது அவர் தடுமாறி வருகிறார்.இவர் கடைசியாக நடித்த என் கே ஜி மற்றும் காப்பான் போன்ற படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்பொழுது அவர் சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தினை அவர் வெற்றிப் படமாகவும் முனைப்பில் தீவிரமாக களமிறங்கி உள்ளார்.ஆனால் சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா நடிப்பின் நாயகன் என போற்றப்படும் நிலையில் இப்பொழுது அவர் தடுமாறி வருகிறார். இவர் இதற்கு முன்பு ஆறு, நந்தா, கஜினி மற்றும் ஏழாம் அறிவு போன்ற சிறந்த வெற்றி படங்களை கொடுத்த நடிகர் சூர்யா. இப்பொழுது தடுமாற்றத்தில் உள்ளார்.

சூர்யா அவர்கள் கடந்த சில வருடங்களாக வெற்றி படங்களை தராத நிலையில் இப்பொழுது அவர் இறுதி சுற்று இயக்கிய சுதா கொங்கரா உடன் இணைந்து சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக்கு உள்ளாகியது.

சூரரைப் போற்று படம் ஒரு உண்மை கதையை தழுவியது. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையபடுத்தி உருவாக்கப்படும் கதையாக இருக்குமென ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இப்படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது.

இதையடுத்து அவர் பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறனிடம் இணைய உள்ளார்.இவர்களில் இணைய உள்ள படத்தின் பெயர் வாடிவாசல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் ஒரு நாவலை தழுவி எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி பெறும் என மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment