சேதுராமனின் இழப்பை தாங்க முடியாமல் அவரின் மனைவி வெளியிட்ட பதிவு.! இந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்தாள் நமக்கே கண்ணீர் வரும்.! உருக்கமான வீடியோ

0

சந்தானத்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சேதுராமன் இவர் சந்தானம் நடித்த கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். ஆனால் இவர் நடிப்பைத் தாண்டி ஒரு டாக்டர் என்பது நம்மில் பலருக்கு தெரியாத ஒன்று.

இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே  இவரின் இழப்பு ரசிகர்களுக்கும் திரை பிரபலங்களுக்கும் பெரும் இழப்பாக கருதப்பட்டது. ஒரு நல்ல டாக்டர் மற்றும் நடிகரை இழந்துவிட்டது திரையுலகம்.

அவரின் மனைவி உமா கர்ப்பமாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனால் சேதுராமன் மறுபடியும் பிறந்து விட்டார் என ரசிகர்கள் அனைவரும் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் சேதுராமன் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவரின் மனைவி உமா உருக்கமான பதிவு ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது மா  இப்படி தான் நான் உங்களை என்றுமே அன்போடு அழைத்தேன் உங்கள் பெயரை வைத்து இதுவரை அழைத்ததே கிடையாது அது ஏன் என்றால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் மீது மரியாதையும் அன்பையும் வைத்திருந்தேன்.

என்னுடைய தினசரி வாழ்க்கை அனைத்தும் உங்களை சுற்றியே இருந்தது உங்கள் சந்திப்பு பயணங்கள் தினசரி நோயாளி பட்டியல் உடற்பயிற்சி நேரம் உணவு ஓய்வு என உங்களை சுற்றியே இருந்தது. இந்த நான்கு வருடத்தில் உங்களுக்கு மட்டுமே நான் முக்கியத்துவம் தந்தேன் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை மட்டுமே நினைத்தேன்.

sethuraman
sethuraman

அதை நிறைவேற்ற சின்ன சின்ன வழிகளில் உங்களுக்கு உதவி செய்துள்ளேன் அதேபோல் நீங்கள் கனவு காண்பதை நிறுத்தியதே கிடையாது உங்கள் கனவை நினைவாக்க சாத்தியப்படும் பொழுதும் நான் வேண்டாம் என்று கூறியதே கிடையாது.  உங்களுக்கு கிடைத்த நல்ல உதவியாளர் நான் அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் என சிறுபிள்ளைத்தனமாக நாம் அடிக்கடி பேசியுள்ளோம்.

பணத்தை என்றுமே நீங்கள் முக்கியமானதாக கருதவில்லை அன்பை யும் மகிழ்ச்சியையும் மட்டுமே முக்கியம் எனக் கருதுகிறீர்கள் அதுமட்டும் இல்லாமல்  உங்களுக்கு நெருக்கமானவர்கள் வருத்தமாக இருந்தால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது. உங்களையும் உங்கள் குணங்களையும் யாராலும் பிரதி எடுக்க முடியாது அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை நீங்கள் கதவை தட்டுவார்கள் என இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் தட்டுவீர்களா என கேட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.