மறைந்த மாமா வடிவேல் பாலாஜி பிறந்தநாள் முன்னிட்டு புகழ் போட்ட பதிவு.? வைரல் நியூஸ்.

தமிழ் திரை உலகில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்த பிரபலங்கள் பலரும் ஏதோ ஒரு காரணத்தினால் உயிரை இழந்து வருகின்றனர். அது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பதோடு மன வலியையும் ஏற்படுத்தி உள்ளது.

திரை உலகில் மிக சிறப்பாக வந்த காமெடி நடிகர் விவேக், நெல்லை சிவா, கே வி ஆனந்த், நிதிஷ் வீரா பலர் இறந்தது நம்மால் ஈடு செய்ய முடியாத ஒன்று. அது போலவேதான் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருந்த வடிவேல் பாலாஜி மேலும் மென்மேலும் சிறப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக அவர் இயற்கை எய்தியது யாரும் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

ஏனென்றால் சின்னத்திரையில் அசாதாரணமான காமெடியை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைப்பதையே வாழ்க்கையாக வைத்திருந்தார். வடிவேல் பாலாஜி கடந்த வருடம் செப்டம்பர் 19 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்செய்தியை பிரபலங்களையும் அவரை நேசித்த மக்களையும் மிகப்பெரிய துக்கத்தை கொடுத்தது. வடிவேல் பாலாஜி இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் அதனை மறக்காமல் குக் வித் கோமாளி புகழ் : வடிவேல் பாலாஜி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டதோடு மட்டுமில்லாமல் பதிவை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியது பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா எப்பவும் நீ என் கூட தான் இருப்ப மக்கள என்னைக்கும் சந்தோஷமா வச்சு இருக்கணும் நீ ஆசைப்பட்டதை நான் நிறைவேற்றுவேன் மாமா மிஸ் யூ என புகழ் பதிவிட்டிருந்தார்.

vadivel balaj

Leave a Comment

Exit mobile version