தல அஜித் பெயரில் நடந்த மோசடி!! அறிக்கை விட்டதற்கு இதான் காரணமாம்.

0

thala ajith legal notice reason: தல அஜித்தின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததற்காக அஜித் நேற்று வழக்கறிஞர் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் மேனேஜர் சுரேஷ் சந்திராவை தவிர வேறு யாரும் எனக்கு பிரதிநிதி கிடையாது எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் வேறு யாரும் தனது பெயரை பயன்படுத்தி மோசடி செய்தால் அதற்கு தான் பொறுப்பாக முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் எந்த மோசடிகளிளும் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருக்கவும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

தல அஜித்திடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வருவதற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது செய்தி  ஒன்று வெளியாகியுள்ளது.

தல அஜித் பெயரை பயன்படுத்தி சென்னையில் பிரபல கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்தது அஜித்துக்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ந்த தல அஜித் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட சொல்லி உத்தரவிட்டு உள்ளாராம்.

இதைச் செய்தது தல அஜித்தின் பழைய திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது. அதுமட்டும்மல்லாமல் மற்றொரு நபர் தல அஜித்தை வைத்து படம் எடுக்கப் போவதாக கூறி பைனான்சியரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ய இருந்ததாகவும் தெரிய வருகிறது. இதனாலேயே இப்படி ஒரு நோட்டீஸ் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.