பிக்பாஸ் லாஸ்யாவிற்கு பட வாய்ப்பு கூவிய காரணம் இதுதான்!! கடுப்பில் முன்னணி நடிகைகள்.

0

Reason for bigboss losliya commited in movie: பிக் பாஸ் லாஸ்லியா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவுக்கு கடந்த சீசனில் இவரது குணத்தால் அனைவராலும் ஈர்க்கப்பட்டவர். என்னதான் இவர் இலங்கையில் இருந்து வந்தாலும் தற்போது உலகமெங்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் குவிந்து உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது லாஸ்லியா தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வந்துள்ளார். இவர் ஹர்பஜன்சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். அதன்பிறகு ஆரியுடன் மற்றொரு திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார் அதையும் தொடர்ந்து தற்போது பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே உள்ளது. சக நடிகைகள் தங்களுக்கு படவாய்ப்புகள் இல்லை இவருக்கு மட்டும் எப்படி பட வாய்ப்புகள் வந்து கொண்டே உள்ளது என கடுப்பாகி உள்ளனர்.

பிக்பாஸில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பு, நடனம், பாடுவது என அனைத்து திறமையும் கொண்டவர். மேலும் இவருக்கென ஒரு ஃபேன் பாலோவிங் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகை லாஸ்லியா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களிடம் தான் எந்த கதாபாத்திரத்திலும் யாருடன் வேண்டுமானாலும் நடிக்க தயார். நான் கேட்கும் பணத்தை கொடுத்தால் போதும் என கூறினாராம்.  இதனை அறிந்த தயாரிப்பாளர்கள் லாஸ்லியாவை தேடிவந்து தங்களது படத்திற்கு புக் செய்கின்றனர்.