அடுத்த படத்தை இயக்க ரெடியானதனுஷின் மனைவி.! படத்தை தயாரிக்க போவது எந்த கம்பெனி தெரியுமா.? வெளிவரும் முழு தகவல்.

aishwarya-dhanush
aishwarya-dhanush

தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவரை தொடர்ந்து அவரது மருமகன் தனுஷ்சும்  சினிமா உலகில் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பேசும் ஹீரோவாக வலம் வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்திலும் தனுஷின் நடிப்பு வேற லெவல் இருந்ததோடு அந்த படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடத்தி உள்ளது மேலும் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி, ஹாலிவுட், போன்றவற்றிலும் வாய்ப்புகள் தனுஷுக்கு குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இவர்களை தொடர்ந்து ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது கணவர் தனுஷை வைத்து 3 என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து “வை ரஜா வை’ என்ற படத்தை இயக்கினார்.

அதன் பிறகு பல வருடங்கள் படங்களை இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா தனுஷ் தற்போது ஒரு புதிய படம் ஒன்றை எடுக்க ரெடியாக உள்ளார் இந்த திரைப்படத்திற்கான ஹீரோ, ஹீரோயினை தேர்ந்தேடுக்க இருக்கிறார் ஆனால் அதற்கு முன்பாக ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

இவர் எடுக்கும் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக இருக்கிறதாம். முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.