சினிமா உலகத்தில் போட்டிகள் எப்போதும் அதிகமாக இருக்கும் குறிப்பாக ஹீரோக்கள் தனது படங்களின் மூலம் மோதி கொள்வது வழக்கம் அந்த வகையில் அஜித், விஜய்யை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் தனுஷ், சிம்பு எப்பொழுதும் மோதிக் கொள்வது வழக்கம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் தற்போது ஒரே நாளில் படங்களை ரிலீஸ் செய்து மோதிக்கொள்ள இருக்கின்றனர். நடிகர் தனுஷின் மாறன் படத்தை தொடர்ந்து ஜவகர் கூட்டணியில் இணைந்து தற்போது திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படம் வருகின்ற 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை எதிர்த்து நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கினர். மூன்றாவது முறையாக கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.
Siddhi ldhani, kayadu lohar, நீராஜ் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளது இதுவரை இல்லாத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெந்து தணிந்தது காடு – திருச்சிற்றம்பலம் ஒரே நாளில் மோதுவதால் இந்த ரேஸில் யார் ஜெயிக்கிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.