6 வருடத்திற்கு பிறகு ரீ என்ட்ரி.! சந்தானதையே ஓரம் கட்டபோகும் காமெடி கிங்.! பரபரப்பில் தமிழ் சினிமா

0
santhanam
santhanam

சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி பிரபலமடைந்த பலரும் சமீப காலங்களாக ஹீரோவாக நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் காமெடியில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் நடிகர் வடிவேலு. இவர் தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்பொழுது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து காமெடி நடிகர் சந்தானமும் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த இரண்டு காமெடி நடிகர்களும் தான் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்கள்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது மீண்டும் பிரபல முன்னணி காமெடி நடிகர் ஹீரோவாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது வேறு யாரும் இல்லை 80, 90களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் கவுண்டமணி தான் தற்பொழுது ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அன்று முதல் தற்பொழுது வரையிலும் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக கொடிகட்டி பறந்து வரும் கமல், ரஜினி போன்றவர்களை தொடர்ந்து தற்பொழுது முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் இரண்டு தலைமுறையாக காமெடி நாயகராக கலக்கி வருகிறார்.

மேலும் காமெடி நடிகர்களிலேயே அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் கவுண்டமணி தான். சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்பொழுது 49 ஓ என்ற புதிய திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இவர் இதற்கு முன்பு இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தாலும் அந்த இரண்டு திரைப்படங்களும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.