பிரபல நட்சத்திர வீரரை கழற்றிவிட்ட RCB அணி – கோலிக்கு புதிய சிக்கல்.?

வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் 15ஆவது சீசன் வெற்றிகரமாக தொடங்க உள்ளது. இதுவரை ஐபிஎல் 8 அணிகள் மோதி வந்த நிலையில் இரண்டு ஆணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு அடுத்த வருடம் 10 அணிகள் விளையாடுகின்றன இதற்காக பல புதிய நிபந்தனைகள் தற்போது வலம் வந்த வண்ணமே இருக்கின்றன.

அதாவது ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் மீதி இருக்கிற வீரர்களை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது இதனையடுத்து சில நாள்கள் அவகாசம் கொடுத்தது ஒரு வழியாக ஒவ்வொரு அணியும் சிறந்த வீரர்களை முதலில் தக்கவைத்துள்ளது.

அந்தவகையில் ஆர்சிபி அணி 4 வீரர்களை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 வீரர்களை மட்டுமே தன் வசப்படுத்தியுள்ளது. முதலாவதாக கேப்டன் கோலி ஆர்சிபி அணி தவிர வேறு எந்த அணியிலும் விளையாட மாட்டேன் என ஒத்த காலில் நிற்பதால் போன வருடம் அவருக்கு 17 கோடி கொடுத்த நிலையில் தற்போது இரண்டு கோடியை குறைத்து அவருக்கு 15 கோடியை ஊதியமாக கொடுத்துள்ளது.

இரண்டாவது வீரராக அதிரடிக்கு பெயர் போன மேக்ஸ்வெல் சமீபகாலமாக பந்து வீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். அவரை 11 கோடி கொடுத்து தன் வசப்படுத்தியுள்ளது 3வது வீரராக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தன் வசப்படுத்தியுள்ளது இவருக்கு 7 கோடியை கொடுத்திருக்கிறது 4-வது வீரராக சுழற்பந்து வீச்சாளர் சாஹல்  6 கோடி கொடுத்து தக்க வைக்க முயற்சித்தது.

ஆனால் எனது அனுபவத்திற்கு இது சரியான  தொகை இல்லை எனக் கூறி ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறி உள்ளார் இதனால் வருகின்ற ஜனவரி மாதத்தில்  கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் RCB அணி மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Leave a Comment

Exit mobile version