சென்னை மற்றும் மும்பை அணிகள் எப்பொழுதுமே வெற்றி அணிகள் தான் – ராயுடு பேச்சு.!

இந்தியாவில் ஐபிஎல்  சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது அதன்படி அண்மையில் ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்தது.  இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியுமே பரபரப்பு பஞ்சமில்லை குறிப்பாக கடைசி போட்டி சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரிசை  நடத்தியது ஆரம்பத்தில் குஜராத் அணி அதிரடியை காட்டியது.

அதன் காரணமாக 20 ஓவர்களில் 214 ரன்கள் அடித்தது அந்த அணியில் கில், சஹா மற்றும் சாய் சுதர்சன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே ஷாக் தான் ஏனென்றால் முதல் ஓவரிலேயே மழை பெய்தது அதன் பிறகு 15 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.  15 ஓவரில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து சென்னை அணி ஆரம்பத்தில் விக்கெட்டை விடாமல் அதிரடி காட்டியது இருப்பினும் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது கடைசி ஒரு ஓவரில் மட்டும் 13 ரன்கள் தேவைப்பட்டது.  கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது  ஜடேஜா சிக்ஸர், பவுண்ட்ரி அடித்து வெற்றியை பெற்றுத்தந்தார். கோப்பையை கேப்டன் தோனி வாங்காமல் ராயுடுவை வாங்க வைத்தார்.

அதற்கு காரணம் இந்த சீசன் உடன் ராயுடு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை வித்த காரணத்தினால் அவரை மகிழ்விக்க சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முடிவை செய்தது இதன் பிறகு பேசிய ராயுடு சொன்னது.. நாங்கள் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்ற பிறகு எங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது அதன் பிறகு டெல்லி அணியை அணியை ஜெயித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது நாங்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடும் வெற்றி பெற்றோம்.

அதன் பிறகு எங்களால் இறுதிப்போட்டியில் வெல்ல முடியும் என்று தோன்றியது இருந்தாலும் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என நினைத்தோம் ஏனென்றால் இந்த சீசனில் அவங்களுடைய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என கூறினார். அவர்களிடம் ஊதா கேப் மற்றும் ஆரஞ்சு கேப் இருந்தது. மேலும் பேசிய ராயுடு சென்னை மற்றும் மும்பை அணிகள் எப்பொழுதுமே..

சிறந்த அணிகளாக இருக்க காரணம் அந்த இரு அணிகளிலும்  அதிக ரன் எடுத்தவர் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.. எந்த ஒரு தொப்பியையும் வைத்திருக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்த அணி வீரர்கள் தங்களுக்காக விளையாடாமல் ஒரு அணியாக விளையாடுவார்கள் அதுதான் இந்த இரு அணிகளும் தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்க முக்கிய காரணம் எனக் கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment