முன்னாள் கிரிக்கெட் வீரரான மஞ்சுரேக்கர்க்கு தர லோக்கலாக இறங்கி பதிலடி கொடுத்த ஜடேஜா.!

0
jadeja
jadeja

ரவீந்திர ஜடேஜா முன்னாள் கிரிக்கெட் வீரரான மஞ்சுரேக்கரை மோசமாக திட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இது ரசிகரிடம் வைரலாகி வருகிறது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்பொழுது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜடேஜா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதற்கு ஜடேஜா தர லோக்கலாக இறங்கி பதிலடி கொடுத்துள்ளார் இந்த பதிலடி தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

மஞ்ச்ரேக்கர் ஐபிஎல் சமயத்தில் ஒரு தலையாக மும்பை இந்தியன்ஸ் டீம் பார்வையில் மட்டுமே வர்ணனை செய்தார் இது அனைவருக்கும் தெரிந்தது அதேபோல் தனக்கு பிடிக்காத வீரர்கள் பற்றி தாறுமாறாகப் கருத்தை கூறுவார் இதன் இவரது வேலை.
முன்புகூட வேஸ்ட் இண்டிஸ் அணி வீரர் பொல்லாடு இவர் பேச்சு வார்த்தை வயிற்றுப்போக்கு என கூறினார்.

அதேபோல் இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவின் மார்க்கெட் மேனேஜர் போல் தான் இருக்கிறது எனக் கூறினார். அது மட்டுமில்லாமல் தோனியின் பேட்டிங் ஷமி பவுலிக் தேவையா வாய்ப்பை வீணாக்கி ராகுல் என அனைவர் மீதும் குற்றச்சாட்டை வைத்தார்.

அப்படி தான் ரவிந்திர ஜடேஜா பற்றியும் இவர் கருத்து இவர் கூறியதாவது நான் அரை குறை திறனுடைய வீரர்களின் ரசிகன் அல்ல, ஒரு நாள் போட்டிகளில் அவரின் நிலை இதுதான் ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சிறந்த பவுலர் ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழல் பந்துவீச்சாளர் தான் தேர்வு செய்ய விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடி தரும் விதமாகவே ஜடேஜா இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
”நான் உங்களைவிட இரு மடங்கு போட்டிகள் விளையாடியிருக்கிறேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வார்த்தை வயிற்றுப்போக்கை போதுமானளவு கேட்டுவிட்டேன்,” என ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்திருக்கிறார்.