சூப்பர் மேனாக பறந்து போய் பந்தை பிடித்த ஜடேஜா.! தவறாகத் தீர்ப்பு கொடுத்த நடுவரால் ரசிகர்கள் ஆத்திரம் வீடியோ உள்ளே

0
jadeja
jadeja

இன்றைய உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும்  இங்கிலாந்து அணியும் மோதிக் கொள்கின்றன, இதில் முதல் முதலாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடினார்கள், இதில் தொடக்க வீரரான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 160 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது, 23 வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்தை வீச ஜேசன் ராய் பந்தை பறக்க விட்டார் அப்போது சூப்பர் மேனாக மாறிய ஜடேஜா பாய்ந்து சென்ற அந்த பந்தை பிடித்தார். இந்த விக்கெட் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது ஏனென்றால் அப்படி ஒரு புதுவிதமான கேட்ச்.

அதேபோல் முதலில் கார்த்திக் பாண்டியா இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனையை 11 வது ஓவரில் ஏற்படுத்திக் கொடுத்தார் அதாவது கார்த்திக் பாண்டியா பந்துவீச ராய் அடிக்க முயற்சி செய்தார், இருப்பினும் பந்து நேராக விக்கெட் கீப்பர் தோனி இடம் சென்றதும் அவர் பிடித்து விட்டார், அந்தப் பந்து ராயன் கையுறையில் பட்டு சென்றது என கவனித்த பாண்டியா அணித்தலைவர் ஹோலி நடுவர் இடமும் முறையிட்டார். ஆனால் இல்லை என மறுத்த நடுவர் அகல பந்து எனவும் அறிவித்தார் டிஆர்எஸ் குறித்து கேட்பது கோலி தோனியிடம் கேட்க அவர் வேண்டாம் என தெரிவித்தார் பின்பு வீடியோவை பார்த்த பொழுது பந்து கை உரையில் பட்டுச் சென்றது தெளிவாக தெரிகிறது.

eng_wicket
eng_wicket

இதைப்பார்த்த ரசிகர்கள் தவறான தீர்ப்பளித்த பாகிஸ்தான் நடுவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள், இந்திய ரசிகர்கள் தான் அவரை விமர்சிக்கிறார்கள் என்றால் பாக்கிஸ்தான் ரசிகர்களும் அவரை விமர்சித்து வருகிறார்கள் ஏனென்றால் இந்தியா இங்கிலாந்து அணியை வென்றால் பாக்கிஸ்தான் அரையிறுதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.