விராட் கோலி இந்திய அணியில் இன்னும் எவ்வளவு காலம் கிரிக்கெட் விளையாடுவார் – கேள்வி சரியான பதிலை சொன்ன ரவிசாஸ்திரி.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்து இந்திய அணியை  நல்ல இடத்திற்கு எடுத்துச் சென்று அழகு பார்த்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி. இவர்  இந்திய அணி பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை இருந்தாலும் ஐசிசி மற்றும் முக்கிய தொடர் போட்டிகளில் பைனலில் அல்லது கடைசி நேரத்தில் கோப்பையை நழுவ விட்டது.

இது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது. பயிற்சியாளர்  ரவி சாஸ்திரின் கீழ் கேப்டனாக செயல்பட்டார்  கோலி ஆனால் கடைசியாக நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் கூட அரையிறுதிக்கு கூட நுழைய முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இது பயிற்சியாளரை எப்படி பெரிதும் பாதித்தது போல கிங் கோலி  அணியின் கேப்டன் பொறுப்பையும் பாதித்தது.

இதனையடுத்து உடனடியாக  ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து கேப்டன்ஷிப் புடுங்கி ரோகித் ஷர்மாவிடம் ஒப்படைத்துள்ளது கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் பயோ  பபுளுக்கு பிறகு ஒரு கேப்டன் மூன்று வடிவிலான போட்டிகளிலும் அணியை வழி நடத்துவது மிகவும் கடினம்.

அந்த வகையில் ரோகித் மற்றும் கோலி தற்பொழுது மாறி மாறி கேப்டனாக செயல்பட இருப்பது நல்ல விஷயம் என அவர் கூறியுள்ளார் மேலும் வீராட்கோலி தற்போது மிகப்பெரிய அளவில் பார்ம்மில் இல்லாததால் அவரது கிரிக்கெட் காலம் எவ்வளவு ஆண்டு இருக்கும் என கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி  நிச்சயம் விராட் கோலி பழைய ஃபார்முக்கு திரும்பி.

தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குறைந்தது 5 அல்லது 6 வருடங்கள் விளையாடுவார் என தெரிவித்தார் மேலும் அவரது உடல் தகுதியும் செம பிட்டாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர் விளையாடுவார் என அடித்துக் கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

Leave a Comment