சினிமா வாய்ப்பு இல்லாததால் 23 வயதிலேயே சீரியலுக்கு வந்த பிரபல நடிகை.!

0

பொதுவாக வெள்ளித்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமாகுபவர்கள் அதிக அளவில் இருந்து வருகிறார்கள்.

அதேபோல் சினிமாவில் தொடர்ந்து பல முயற்சிகளை செய்தால் மட்டுமே அவர்களால் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து தங்களுக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியும்.அந்த நடிகரோ, நடிகையோ சிறு தவறு செய்தால் கூட தங்களது மொத்த மார்க்கெட்டையும் இழந்தவர்கள் ஏராளம். சினிமாவைப் பொறுத்தவரை அழகாக இருந்தால் ஜெயித்துவிடலாம் என்பதெல்லாம் கிடையாது.

நடிப்பு திறமையையும் ஏதாவது ரசிகர்களை கவரும் வகையில் ஒரு விஷயம் இருந்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து இருக்க முடியும்.அந்த வகையில் ஒரு நடிகை தான் ராதிகா. இவர் கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பிறகு தமிழில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த எம்பிரான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவிற்கு வெற்றியை தரும் என்று எதிர்பார்த்த ராதிகாவிற்கு பெரும் ஏமாற்றத்தையே தந்தது.இந்த திரைப்படத்தினை தொடர்ந்து திரும்பும் பக்கமெல்லாம் ஏமாற்றம் அடைந்த ராதிகா பிறகு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

rathika preethi 2
rathika preethi 2

அந்த வகையில் தற்போது பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் நடித்தும் கிடைக்காத ஒரு பிரபலம் இந்த சீரியல் இவருக்கு எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.