2021 -ல் அதிக படங்களை கைப்பற்றி டாப் நடிகைகளை அசர வைத்த ராசிகண்ணா – எத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிற மொழியின் நடிகைகள்தான் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்றுவதோடு மட்டுமல்லாமல் நிரந்தர இடத்தை பிடிக்கின்றன அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராசி கண்ணா தமிழில் சமீப காலமாக தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி அசத்தி வருகிறார்.

இவரது திரைப்படங்கள் ஹிட் அடிக்கிறதோ இல்லையோ இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் இவருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கின்றனர் அதற்கு காரணம் தெலுங்கில் இவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு திறமை மற்றும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுவது வழக்கம்.

அதையே தற்போது தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பதால்  தற்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வாய்ப்புகளை கூட்டி கொடுக்கின்றனர். தமிழில் நடிகை ராசி கண்ணா இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பின் அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழன், அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

ராசி கண்ணா 2021  மட்டும் டாப் நடிகை கள் போல இவரும் பல்வேறு படங்களில் தன் வசம் வைத்துள்ளார் அந்த வகையில் இவர் கையில் மேதாவி, சைத்தான் கா பச்சா,  சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் இருக்கின்றன இது போதாத குறைக்கு மீண்டும் ஒருமுறை இயக்குனர் சுந்தர் சியுடன் கை கொடுத்து ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் கூட இவ்வளவு படங்களை கைப்பற்றுவது இல்லை ஆனால் பிற மொழியில் வந்த ராசி கண்ணா இவ்வளவு படங்களை கைவசம் வைத்திருப்பது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment