ஜிமிக்கி பொண்ணு “ராஷ்மிகா மந்தனா” வாரிசு படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் – இத்தனை கோடியா .?

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வருபவர்  ராஷ்மிகா மந்தனா.  முதலில் “கிரிக் பார்ட்டி” என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அதன்பிறகு ஒன்னு, ரெண்டு கன்னட படத்தில் நடித்தாலும் தெலுங்கு சினிமா தான் அவரை அடுத்த லெவலுக்கு தூக்கி விட்டது.

தெலுங்கில் இவர் நடித்த கீதகோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ராஷ்மிகா மந்தனாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாலும் உருவாகியது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அதிகமாக குவிந்தது தொடர்ந்து படம் பண்ணி வந்த இவர் தமிழில் “சுல்தான்” திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய ஒரு தோல்வி படமாக அமைந்து போனது. இதனால் மன வருத்தத்தில் இருந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திடீரென விஜய் படத்தில் நடிக்கும் வைப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். படமும் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஜிமிக்கி  பொண்ணு, ரஞ்சிதமே ரஞ்சிதமே போன்ற பாடல்கள் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது, படத்திலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் செம்ம சூப்பராக நடித்து அசத்தினார். இந்த படத்தை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா 2 போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ரஷ்மிகா மந்தனா வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்வையில் வாரிசு படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா சுமார் 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Leave a Comment