ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து புஷ்பா 2 படத்தில் இணையும் மற்றொரு முன்னணி நடிகை..! யார் அது தெரியுமா.?

அண்மை காலமாக தென்னிந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் உருவாகின.. அந்த படங்கள் வெளிவந்து வெற்றியையும் பெற்றுள்ளன அதில் ஒன்றாக சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா.

இந்த படம் தெலுங்கை தாண்டி மற்ற மொழிகளிலும் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டது ஆனால் ஒரு கட்டத்தில் கதையில் சில மாற்றங்கள் செய்து தற்பொழுது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

படக்குழு இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திலிருந்து சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடுவார் என கூறப்படுகிறது மற்றொரு பக்கம் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை எனவும் ஒரு தகவல்களுக்கு இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நந்தனா நடிக்கிறார் மற்றொரு பக்கம் இந்த படத்தில் மற்றொரு டாப் நடிகையும் கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது அந்த நடிகை வேறு யாரும் அல்ல.. தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை மட்டுமே கண்டு வரும் சாய் பல்லவி புஷ்பா 2 திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் அவர் பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு அவரை அணுக உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.. பொறுத்திருந்து பார்ப்போம் நடிகை சாய் பல்லவி புஷ்பா 2 படத்தில் இணைவு வாரா இல்லையா என்று..  இந்த செய்தியை தற்பொழுது ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Comment